நரிக்குறவர் சமுதாயத்திற்கு இலவச வீடுகள்: திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு

செங்கம் நரிக்குறவர் சமுதாயத்தவருக்கு கட்டப்பட்டு வரும் இலவச வீடுகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-19 01:38 GMT

நரிக்குறவர் சமுதாயத்தவருக்கு கட்டப்பட்டு வரும் இலவச வீடுகளின் நிலை குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர் . அதில் 35 நபர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்ததாரர் வீடுகளை கட்டி முடிக்காமல் உள்ளார். அப்பகுதி மக்கள் வீடுகளை விரைவாக கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நரிக்குறவர் சமுதாயத்தவர் காலனியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   பின்னர் வீடு கட்டும் பணி தாமதம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டார் தொடர்ந்து வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நரிக்குறவர் இன மக்கள் 35 வீடுகள் கட்ட அனுமதி அளித்தும் ஒப்பந்ததாரர் இதுவரையில் 12 வீடுகள் மட்டுமே ஓரளவு கட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News