4 வயது சிறுவனை பக்கத்தில் அமர வைத்து மது அருந்தும் நபரின் வீடியோ வைரல்

திருவண்ணாமலையில் 4 வயது சிறுவனை அமர வைத்து நண்பர்களுடன் மது அருந்திய வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Update: 2023-05-27 10:18 GMT

சிறுவனை பக்கத்தில் அமர வைத்து மது அருந்தும் இளைஞர்கள்

திருவண்ணாமலையில் 4 வயது சிறுவனை பக்கத்தில் அமர வைத்து நண்பர்களுடன் மது அருந்திய வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மாணவர்கள் சிறுவர்கள் நல்லொழுக்கத்துடன் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.சிறுவர்கள் மாணவர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க அதிக அளவில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கல்விக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து நல்லொழுக்கத்தை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள பிரபல தனியார் மதுபான கூடத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவனை அருகில் அமர வைத்துக் கொண்டு இளைஞர்கள் உள்ளிட்டோர் மது அருந்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தக் காட்சியில் சிறுவன் முன்பு மது பாட்டில் உள்ளது.

சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது,  21 வயதுக்கு உட்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என வழிகாட்டி நெறிமுறைகள் மதுபானக்கூடங்களுக்கு உள்ளது.ஆனால் இவை எதையும் பின்பற்றாமல் மதுபானக்கூடம் உள்ளே சிறுவனை அனுமதித்தது மட்டுமின்றி அவன் முன்பு மது பாட்டில் வைக்கப்பட்டுள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் மதுபான கூடம் இயங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் நான்கு வயது சிறுவனை எப்படி மதுக்கூடத்துக்குள் அனுமதித்தனர், சிறுவனை ஓட்டலுக்கு அழைத்து வந்த நபர் யார் , நண்பர்களுடன் மது அருந்துவதற்கு சிறுவனின் தந்தையே அழைத்து வந்தாரா என பலரும் கேள்வி எழுப்பினர்.

எதுவும் அறியாத மழலையின் நெஞ்சில் விஷம் விதைக்கப்பட்டுள்ளது .  இது குறித்து ஆய்வு செய்து தமிழக அரசும் ,  மாவட்ட ஆட்சியர்,  காவல் கண்காணிப்பாளர்  ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

இது தொடர்பாக திருவண்ணாமலை காவல்துறை அதிகாரிகள் கூறும்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட தனியார் மதுபான கூடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உறுதி செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதற்குக் காரணமானவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News