இளைய சமுதாயத்தை ஆக்கபூர்வமான சக்தியாக மாற்ற பாஜகவுக்கு வாக்களிக்க பிரசாரம்

இளைய சமுதாயத்தை ஆக்கபூர்வமான சக்தியாக மாற்ற தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள்,என பாஜக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்

Update: 2024-04-15 03:28 GMT

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்

பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கலசப்பாக்கம் மற்றும் செங்கம் தொகுதியில் உள்ள  லாடாவரம் ,பாடகம், அலங்காரமங்கலம் ,காம்பட்டு, ஏலத்தூர் ஆதமங்கலம் புதூர் கிடம் பாளையம், கேட்ட வரம் பாளையம் , அருணகிரி மங்கலம், தென் மகாதேவ மங்கலம் ,கோவில் மாதிமங்கலம், கடலாடி ,கீழ்குப்பம் ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசுகையில்,

நமது அடுத்த தலைமுறைகள் போதை பழக்கத்திற்கு முழுகாமல் இருக்க தாமரை சிங்கத்தில் வாக்களியுங்கள்.

இன்றைய சமுதாயத்தை ஆக்கபூர்வமான சக்தியாக மாற்ற முறையான விளையாட்டு பயிற்சி, கணினி பயிற்சி, போட்டி தேர்விற்கு தேவையான புத்தக மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஆகியவற்றினை அமைத்து இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக சொல்லக் கூடிய அளவுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிலையை அடைய முழுமையாக உழைப்பேன்.

மேலும் இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் உங்களின் ஒருவனாக குரல் கொடுத்து இந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களை பாரத பிரதமர் மோடியிடம் கேட்டு பெற்று தருவேன்.

ஜவ்வாது மலை மிக சிறந்த சுற்றுலா தளமாக மேம்படுத்தவும், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் உலக தரத்தில் அமைத்து மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தவும் பாடுபடுவேன்.

பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். பாரத பிரதமரின் வங்கி கடன் திட்டங்கள் மூலமும் மேலும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்து கொடுப்பேன்.

வல்லரசு நாடாக நமது நாடு வளர்ச்சி பெறவும் நமது திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி பெறவும் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என அஸ்வத்தாமன் வாக்கு சேகரித்தார். 

இந்தப் பிரச்சாரத்தின் போது பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் , பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் ,பாஜக ஒன்றிய தலைவர்கள், செயலாளர், நிர்வாகிகள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News