3 மணி நேரம் பசியுடன் அவதி அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா எம்எல்ஏ வருகைக்காக காத்திருந்த மாணவர்கள்

students suffered hungry for 3 hrsதமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்காக 3 மணிநேரம் பசியுடன் மாணவர்கள் காத்திருந்தனர்.

Update: 2022-09-05 07:45 GMT

எம்எல்ஏ விழாவிற்கு வர தாமதமானதால்  பசியுடன் சோர்வுடன் காத்திருந்த பள்ளி மாணவர்கள். 

students suffered hungry for 3 hrs

கன்னிகை பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியபாளையம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் எம் எல் ஏ வருவதை முன்னிட்டு மூன்று மணி நேரம்  பசியுடன் மாணவர்கள் காத்திருந்ததால்  பெரும் பாதிப்படைந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த கன்னிகை பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 149 மாணவர்களுக்கும் இதே போல் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 144 மாணவர்களுக்கு அரசின் நிலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி காலை 11 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் எம்எல்ஏ கோவிந்தராஜன் நேரத்திற்கு வராத காரணத்தினால் சுமார் மதியம் 1:30 மணி வரை மாணவர்கள் உணவருந்தாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை 

அரசின் நலத்திட்டஉதவிகள் பெறும் பயனாளிகள் ஆகட்டும், மாணவ, மாணவிகள் ஆகட்டும் யாராக இருந்தாலும்   விழாவிற்கு குறிப்பிட்ட நேரத்தில்   சிறப்பு அழைப்பாளர்கள் வந்துவிட்டால்  பயனாளிகள் காத்திருப்பது தவிர்க்கப்பட்டுவிடும். அதுவும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை  ௩ மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைப்பது என்பது  தேவையில்லாத ஒன்று. இதுபோன்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு அப்பாயின்ட்மென்ட் தரும்  விஐபிக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய மற்ற வேலைகளை புறக்கணித்துவிட்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பசியுடன் காத்திருந்ததால் அவர்களுக்கு என்ன  வேண்டுமானாலும் நேரலாம். கடைசியில்  ஏதாவது விபரீதம் விளைந்தால் அதற்கு பள்ளியே பொறுப்பு என கை காட்டிவிடக்கூடாது. எனவே விழாவிற்கு வரும் விஐபிக்கள் யாராக இருந்தாலும் சற்று பொறுப்புடன் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஜராக வேண்டும் என்பதே  மாணவர்களின் சார்பில் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 

Tags:    

Similar News