குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து தீயை அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்பு வீரர்கள்.

Update: 2024-05-19 12:30 GMT

குப்பை சேகரிக்கும் ஆலையில் ஏற்பட்டுள்ள தீ 

கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் திணறி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல் பயன்படுத்தி வந்த நிலையில் கடும் வெய்யிலின் தாக்கத்தின் போது பிளாஸ்டிக் கழிவுகளில் ஏற்பட்ட உச்சகட்ட வெப்ப சலனத்தால் இந்த தீ விபத்து  ஏற்பட்டிருக்கிறது.

மேலும் கழிப்பொருட்கள் சேகரிப்பு குடோனில் சேகரிக்கப்பட்டுள்ள ஆயில் பேரல்கள் வெடித்து சிதறுவதால் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மேலும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. தாமதமாக வந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்ததால் தீயணைப்பு வாகனம் திரும்பிச்  சென்றது. அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலைய வாகனங்கள் வர தாமதமான நிலையில் தொடர்ந்து தீயின் வேகம் அதிகரித்து வருகிறது.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளான பாப்பன்குப்பம், சிந்தலகுப்பம், புது கும்முடிபூண்டி , சிறு புழல் பேட்டை உள்ளிட்ட பல கிராமங்கள் புகைமண்டலமாய் காட்சியளித்து வருகிறது. ஒரு மணி நேரமாக தீயானது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளில் தீ பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க வந்த ஒரு வாகனமும் தண்ணீர் இல்லாமல் திரும்பிய நிலையில் மாற்று வாகனங்கள் இங்கு வராததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News