பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி உயிரிழப்பு
பள்ளிப்பட்டு அருகே விவசாய நிலத்தில் தண்ணீர் விடுவதற்கு சென்ற விவசாயியை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிப்பட்டு அருகே விவசாய நிலத்தில் தண்ணீர் விடுவதற்கு சென்ற விவசாயி பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணராஜ் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கோரகுப்பம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் விவசாயி நாகராஜ் (வயது 55). திருமணமாகி மனைவி மற்றும் 3.மகள்கள் 1 மகன் உள்ளனர். இவருக்கு சொந்தமான விளை நிலத்தில் வாழை மரங்கள் பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு மணி அளவில் நாகராஜ் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று மோட்டார் ஆன் செய்து தண்ணீரை விட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவரது காலில் ஏதோ கடித்தது போல் உணர்ந்தார். உடனடியாக குடும்பத்திற்கு தகவல் அளித்து திருத்தணி அடுத்த சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பாம்பு கடித்ததை உறுதி செய்து சிகிச்சை மேற்கொண்டனர்
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொதட்டூர்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.