திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு

திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன்,மனைவி உயிரிழந்தனர்.

Update: 2024-05-21 10:49 GMT
விபத்தில் இறந்த கணவன் மனைவி.

திருத்தணியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்து உள்ள பட்டாபிராமபுரம் ஊராட்சிக்கு செல்லும் புதிய பை-பாஸ் சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்த கார் திடீரென்று அந்தப் பகுதியில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரவைர் துரிதமாக பிரேக் பிடித்துள்ளார்.

இதனால் சொகுசு கார் தேசிய நெடுஞ்சாலையில் உடனடியாக திரும்பி பின்னால் வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் பக்கவாட்டில் நேருக்கு நேர் மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் சொகுசு கார் ஓட்டுனரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் & மனைவி இருவருக்கும் தீவிர சிகிச்சை மருத்துவர்கள் அளித்து வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி படுகாயம் அடைந்த காரணத்தினால் இறந்துவிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் கணவன் & மனைவி இருவரது பிரேதத்தையும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் வைத்துவிட்டு இந்த விபத்திற்கு காரணமான சொகுசு கார் ஓட்டுநர் திருத்தணி அருகில் உள்ள கே.ஜி கண்டியை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது சொந்த காரை எடுத்து வரும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சொகுசு கார் ஓட்டுனர் இளங்கோ.வன் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் மரணம் அடைந்த கணவன், மனைவி இவர்கள் சென்னை அருகில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் பிரபல டியூப் தயாரிக்கும் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் பணியை மேற்கொள்ளும் மெய்யழகன் (வயது50) அவரது மனைவி லஷ்மி (வயது45) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் இவர்களது  சொந்த ஊரான பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பகுதியில் திருமண நிச்சயதார்த்தத்திற்காக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது இந்த விபத்தில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இந்த கணவன் மனைவிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு காரில் ஏற்பட்ட திடீர் பிரேக் போட்டதின் காரணமாக இந்த இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதி கணவன்,மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News