கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு

கும்மிடிப்பூண்டியில் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டுப் போனது.

Update: 2024-05-17 08:35 GMT

கும்மிடிப்பூண்டி பஜாரில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற அஞ்சல்துறை ஊழியரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்க பணம் திருட்டு போனது. சிசிடிவி பதிவுகளைக் கொண்டு இரண்டு மர்ம ஆசாமிகளை  போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது68) இவர் ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர் ஆவார். இந்நிலையில் ஜெயராமன் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்து தனது ஸ்கூட்டியின் சீட்டின் கீழ் பாகத்தில் வைத்து பூட்டி விட்டு கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஒரு மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றுள்ளார்.

மருந்துகடை வாசலில் சாவியுடன் ஸ்கூட்டியை ஜெயபாலன் நிறுத்திய வாகனத்தின் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் அருகே உள்ள கடைக்கான முகவரியை கேட்டுள்ளார். அப்போது திட்டமிட்டபடி மற்றொரு ஹெல்மெட் நபர் ஜெயபாலனின் ஸ்கூட்டியில் இருந்த சாவியை எடுத்து இருசக்கர வாகனத்தின் டிக்கியில் இருந்த 2.லட்ச ரூபாயை ரொக்க பணத்தை திருடி கொண்ட அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுபற்றி ஜெயபாலன் போலீசில் புகார் செய்தார்.

தொடர்ந்து மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி கேமரா வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தப் பதிவை கொண்டு கும்மிடிப்பூண்டி போலீசார் மர்மசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஸ்கூட்டியில் இருந்த ரூபாய் இரண்டு லட்சம் பணத்தை திருடி சென்ற சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News