திருவள்ளூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

Free Eye Operation Camp Report -திருவள்ளூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2022-06-24 02:34 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Free Eye Operation Camp Report -திருவள்ளூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம், லயன்ஸ் கிளப் புரோஜனி இணைந்து நடத்தும் சங்கர நேத்ராலயா இலவச கண் சிகிச்சை முகாம் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஏ.டி. கண்ணன் தலைமையில் நடைபெற்றது.   திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் செந்தாமரைக்கண்ணன் மாவட்ட மகளிரணி செயலாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் கலந்துகொண்டு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னதாக அனைவரையும் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சரவணன்,பார்த்தசாரதி ஆகியோர் வரவேற்றனர் இதில் சங்கர நேத்ராலயா வின் 10.க்கு மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கிராமத்தைச் சேர்ந்த 90 பேருக்கு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 16 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 34 பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்டத்துறை பாதுகாப்பு சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், துணை செயலாளர் யுவராஜ், ஆகியோர் செய்திருந்தனர். இதில் இணைச் செயலாளர் நீலா ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வம் நன்றி கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News