தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
தமிழ்நாடு அரசு சார்பில் தோழி என்ற பெயரில் மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.;
வெளியூரில் இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு”தோழி பெண்கள் தங்கும் விடுதி”தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ளது.
அமைந்துள்ள இடங்கள்: சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளன.
வசதிகள்: இந்த விடுதிகளில் சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கு அறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.
நேரம்: இரவு 10:00 மணிக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
முழுமையான விவரங்களுக்கு:
tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெறலாம்.
பின்குறிப்பு :
அரசு இதைப்போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தினால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதுடன் அந்த கட்டிடத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வது அவசியம் ஆகும். தூய்மைப்பணிகள், அங்கிருக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருத்தல், சுற்றுப்புறத்தை எப்போதும் பராமரிப்பது போன்ற பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு இணையாக மேற்கொண்டால் மட்டுமே அங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் பயனுள்ளதாக அமையும்.