அந்தியூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாழை தார் ஒன்று ரூ.1,750க்கு விற்பனை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாழை தார் ஒன்று ரூ.1,750க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
அந்தியூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று (ஜன.21) செவ்வாழை தார் ஒன்று ரூ.1,750க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறும். அதன்படி, நேற்று (ஜன.21) செவ்வாய்க்கிழமை என்பதால் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
இதில், கதளி ரகம் கிலோ ஒன்று 52 ரூபாய் வரையிலும், நேந்திரன் ரக வாழை கிலோ ஒன்று 60 ரூபாய் வரையிலும் விலை போனது. அதே போன்று, பூவன் ரகம் தார் ஒன்று 480 ரூபாய் வரையிலும், தேன் வாழை 650 ரூபாய் வரையிலும், ரஸ்தாளி வாழை 520 ரூபாய் வரையிலும், ரொப்பஸ்டா 420 ரூபாய் வரையிலும், மொந்தன் வாழை 600 ரூபாய் வரையிலும் விலை போனது.
அதே நேரத்தில், கடந்த வார ஏலத்தில் 1,440 ரூபாய்க்கு விற்பனையான செவ்வாழை தார் ஒன்று இந்த வாரம் 1,750 ரூபாய்க்கு விலை போனது. மொத்தம் 2 ஆயிரத்து 700 வாழைத்தார்கள் வரத்து இருந்த நிலையில், 7 லட்சத்து 43 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விலை போனது. தொடர்ந்து, செவ்வாழை தார் விலை உயர்ந்தே இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.