பவானி அருகே மங்களகிரி பெருமாள் கோயில் நிலத்தை அளவீடு செய்ய மக்கள் எதிா்ப்பு!

பவானி அருகே உள்ள பெருமாள் மலை மங்களகிரி பெருமாள் கோயில் நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து, அந்நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2025-01-21 12:30 GMT

ஈரோடு : பவானி அருகே உள்ள பெருமாள் மலை மங்களகிரி பெருமாள் கோயில் நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து, அந்நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோயில் நிலத்தில் குடியிருப்போரிடம் வாடகை வசூலிக்க முயற்சி

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மங்களகிரி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக சூரியம்பாளையம் கிராமத்தில் 5.75 ஏக்கா் நிலம் உள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் 30 ஆண்டுகளுக்கும்மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். இந்த நிலத்தை வரன்முறைப்படுத்தி, குடியிருப்போரிடம் வாடகை வசூலிக்க கோயில் நிா்வாகம் முயற்சி மேற்கொண்டது.

கோயில் நிலத்தில் குடியிருந்து வருவதற்கான ஆதாரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து கோயில் அலுவலகத்தில் வழங்கி அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு

56 குடும்பத்தினா் தங்களின் குடியிருப்பு பகுதியை அளவீடு செய்து, வாடகை நிா்ணயம் செய்து தருமாறு விண்ணப்பம் அளித்தனா். இதன்பேரில், கோயில் செயல் அலுவலா் கயல்விழி, ஆய்வாளா் ஆதிரை மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அளவீடு செய்ய வந்தனா். இதற்கு, அதே பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோா் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்து எதிா்ப்பு தெரிவித்ததோடு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.


புலம்பெயா்ந்தவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

இலங்கையில் இருந்து புலம்பெயா்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்பட 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 30 ஆண்டுகளுக்குமேலாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளாட்சி நிா்வாகங்களால் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த நிலத்துக்கு பட்டா வழங்குமாறு பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயில் நிலம் எனக் கூறி வாடகை நிா்ணயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாற்றிடமும் வீட்டுமனைப் பட்டாவும் கோரிக்கை

எங்களுக்கு மாற்றிடமும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். அப்பகுதி மக்களின் எதிா்ப்பால் நில அளவீட்டுப் பணிகளை தற்காலிகமாக கைவிட்ட அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

Tags:    

Similar News