விவசாயி பிடித்து வைத்திருந்த மலைகிராம ஆதிவாசி வளர்த்த குதிரை போலீஸாரால் மீட்பு

தனது தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த அந்தக் குதிரையை பிடித்து தோட்டத்திலேயே கட்டி போட்டு வைத்துள்ளார்.

Update: 2021-07-26 08:30 GMT

போடிநாயக்கனூர் அருகே மூன்று நாட்களாக சிறை பிடித்து வைத்திருந்த மலைகிராம ஆதிவாசி வளர்த்த குதிரையை தோட்டக்காரரிடமிருந்து போலீஸார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம், போடி நாயக்கனுார் அருகே உள்ள சோலையூர் என்ற மலைக்கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியினத்தை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவர் குதிரை வளர்த்து வந்தார். இந்த குதிரை மூன்று நாட்களுக்கு முன்னர் கயிறை அறுத்துக் கொண்டு,  அப்பகுதியில் உள்ள முருகன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் தோட்டத்திற்குள் புகுந்ததாம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயி முருகன், தனது தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த அந்தக் குதிரையை பிடித்து தோட்டத்திலேயே கட்டி போட்டு வைத்துள்ளார். மூன்று நாட்களாக குதிரைக்கு தண்ணீர், உணவும் கொடுக்காமல் பட்டினியாக இருக்கச் செய்தாராம். இந்நிலையில், குதிரையை தேடி அலைந்த முத்துக்கருப்பன், குதிரை முருகனின் தோட்டத்தில் கட்டிக்கிடப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து முருகனிடம், தனது குதிரையை தருமாறு கேட்ட, போது, தனக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு தந்தால் மட்டுமே குதிரையை ஒப்படைக்க முடியும் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மலைகிராமஆதிவாசி முத்துக்கருப்பன், போடி தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ,போலீசார் தலையிட்டு குதிரையை மீட்டு முத்துக்கருப்பனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News