ஆண்டிபட்டியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஓபிஎஸ்

ஆண்டிபட்டி தொகுதியில் பழங்குடியின மக்களுக்கு ரூ1.24கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓபிஎஸ் வழங்கினார்.

Update: 2021-02-01 09:21 GMT

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசுத்துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதலாவதாக வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை முருக்கோடை மற்றும் நரியூத்து ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் கண்களை திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மயிலாடும்பாறையில் நடைபெற்ற விழாவில், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, வருவாய் பேரிடர் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கடமலை - மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கரட்டுப்பட்டி, தாழையூத்து, உப்புத்துறை மற்றும் நொச்சி ஓடை ஆகிய பகுதிகளை சேர்ந்த 93 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ரூபாய் 1.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலூத்து, முத்தாலம்பாறை மற்றும் டி.ராஜகோபாலன்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ26.88 கோடி மதிப்பிலான அங்கன்வாடி மையம் மற்றும் ரூ34.50 லட்சம் மதிப்பில் குமணன்தொழு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News