குழந்தைகள் பாதுகாப்பு வினாடி - வினா போட்டி..!
குழந்தைகள் பாதுகாப்பு வினாடி - வினா போட்டி.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
'மகிழ்முற்றம்' எனும் குழு மூலம் குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளில் பாலியல் தொல்லை புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த வினாடி-வினா போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மகிழ்முற்றம் மூலம் விழிப்புணர்வு
கடந்த நவம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் மூலம் 'மகிழ்முற்றம்' எனும் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் மூலம் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாடி-வினா போட்டி
பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் அதிகரித்த நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வினாடி-வினா போட்டியை 'மகிழ்முற்றம்' மூலம் நடத்த உத்தரவிடப்பட்டது.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்பு
நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 20 மாணவர்கள் நேரடியாகப் போட்டியில் பங்கேற்க, மற்ற மாணவர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல்
பள்ளி அளவில் நடந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குழுவினரின் பெயர் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.