30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்க முடிவு..!

30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்க முடிவு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-15 10:20 GMT

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்க கூட்டமைப்பின் ஏற்காடு கிளை பெயர் பலகை, ஏற்காடு ஒண்டிக்கடை ரவுண்டானாவில் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநில தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்து, பெயர் பலகையை திறந்து வைத்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தொடர்ந்து தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

முக்கிய தீர்மானங்கள்

1 மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்று தருவது

2 அரசு வழங்கும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரியப்படுத்தி பயனடைய செய்வது

பங்கேற்பாளர்கள்

♦ துணை செயலர் குமரேசன்

♦ ஏற்காடு தலைவர் சுரேஷ்

♦ துணை தலைவர் பாலமுருகன்

♦ ஏற்காடு தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் கலா, மாலினி உள்பட பலர்

Tags:    

Similar News