ஓம்கார மலை கோவிலுக்குநாளை கும்பாபிேஷகம்..!
ஓம்கார மலை கோவிலுக்குநாளை கும்பாபிேஷகம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ஓமலுார் அருகே திண்டமங்கலம் ஓம்கார மலையில் எழுந்தருளியுள்ள வேல்முருகன், ரங்கநாதர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை, கணபதி, நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலம்
தொடர்ந்து திண்டமங்கலம், ஊ.மாரமங்கலம், பெரியேரிப்பட்டி, பச்சனம்பட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடங்களை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்தில் அடங்கியவை
♦ காளைகள்
♦ குதிரைகள்
♦ மேளம்
♦ தாளம்
மேள, தாளம் முழங்க 'அரோகரா' கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் மலையில் ஏறி கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
இன்று நடக்கும் யாக பூஜைகள்
இன்று, 2, 3ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன.
நாளை காலை கும்பாபிேஷகம்
நாளை காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் விநாயகர், கடம்பன் ஆலய விமான பூஜைகள் முடிந்து வேல்முருகன், ரங்கநாதர் சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.