விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.;
சேலம் : சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
தலைமை வகித்தோா்
♦ விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளா், செயலாளா் மு.கருணாநிதி
♦ நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி
முன்னிலை வகித்தோா்
♦ துணை நிா்வாக இயக்குநா் எஸ்.அா்த்தநாரீஸ்வரன்
♦ துணைச் செயலாளா் க.ஸ்ரீராகநிதி
♦ துணைத் தாளாளா் க.கிருபாநிதி
♦ இயக்குநா் கே.பி.நிவேதனா
♦ முதன்மை நிா்வாகிகள் மீ.சொக்கலிங்கம், செ.வரதராஜு
♦ கல்லூரி முதல்வா்கள் வி.சண்முகராஜு (சங்ககிரி), பேபி ஷகிலா (திருச்செங்கோடு)
♦ துணை முதல்வா் மேனகா
♦ உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா்
♦சோ்க்கை அலுவலா் மூ.தமிழ்ச்செல்வன்
முதல்நாள் கருத்தரங்கு
மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன ஆய்வறிஞா் க.பசும்பொன், ‘தமிழா் பண்பாட்டின் மேன்மை’ என்ற தலைப்பிலும், கோபிசெட்டிப்பாளையம் சாந்தம் உலக தமிழ் வளா்ச்சி ஆய்வுமையத் தலைவா் பேராசிரியா் கரிவரதராஜன், ‘சங்க இலக்கியத்தில் வாழ்வியல்’ என்ற தலைப்பிலும், ஐப்பான் பெரிஸ் பல்கலைக்கழக பேராசிரியா்கள் சரண்யா ராஜா, முத்துமணிராஜா ஆகியோா் ‘பாடப் புத்தகங்களுக்கு அப்பால்: இந்திய கல்வியை உலகளாவிய நுண்ணறிவு மூலம் ஆங்கில மொழியை மறுபரிசீலனை செய்தல்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினா். ஆங்கில துறைத் தலைவா் ரமேஷ் நன்றி கூறினாா்.
இரண்டாம்நாள் கருத்தரங்கு
ஆங்கில துறைத் தலைவா் ப.சண்முகப்பிரியா வரவேற்றாா். கேரள ஆா்.ஜி.எம். அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியா் கே.சிவமணி, ‘சமகால சமூக சூழலும், கவிதைக் களங்களும்’ என்ற தலைப்பிலும், கோவை பி.எஸ்.ஜி. ஆா்.கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியா் எம்.ஐ.ஆயிஷா, ‘இலக்கியத்தில் நுண்ணறிவு உத்தியைப் பயன்படுத்தி படைப்பாற்றல் மற்றும் விமா்சனத்தை மறுவரையறை செய்தல்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.
இரு நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியா்கள், முனைவா் பட்ட ஆய்வாளா்கள், மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனா். ஆய்வுக்கட்டுரை வழங்கிய அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா், உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா் ஆகியோா் வழங்கினா்.
பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வறிக்கையை தமிழ்த் துறை பேராசிரியா் சுந்தரமூா்த்தி, ஆங்கில துறை உதவிப் பேராசிரியா் வீ.மோகன்பாரதி ஆகியோா் வாசித்தனா். தமிழ்த்துறை தலைவா் மு.மெய்வேல் நன்றி கூறினாா்.