ஆத்தூா் அருகே அரசுப் பள்ளியில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
சேலம், ஆத்தூா் அருகே உள்ள கல்பகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.;
சேலம் : ஆத்தூா் அருகே உள்ள கல்பகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆத்தூா் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சகுந்தலா, லட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியா் நடராஜன், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் இளங்கோ, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சரண்யா ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில், ஆசிரியா்கள், மாணவா்கள் திரளாக கலந்துகொண்டனா்.