கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து..!
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
சேலம் தர கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குனர் கவுதம் அளித்த அறிக்கையின்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 113 மொத்த உர விற்பனையாளர்கள், 701 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் 17 கலப்பு உரம் உற்பத்தியாளர்கள் உர விற்பனை உரிமம் பெற்று வணிகம் செய்து வருகின்றனர்.
உரங்களின் ஆய்வு மற்றும் கண்காணிப்பு
சில தனியார் உர விற்பனை மையங்களில் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலையில் உரங்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இந்த கூடுதல் விலையில் உரங்களை விற்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உர புகார்களுக்கு தொடர்பு கொள்ள
விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களை பின்வரும் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்:
♦ மாநில அளவில்: வாட்ஸ்அப் - 93634-40360
♦ மாவட்ட அளவில்: 0427-2451050, 94433-83304
உரிமம் பெற்ற உர வியாபாரிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை பின்பற்றி விற்பனை செய்வதை உறுதி செய்து விவசாயிகளுக்கு தரமான உரங்களை சரியான விலையில் வழங்குவது அவசியம்.