2 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு தீவிரம்... மார்ச் 19 ந்தேதி சேலத்தில் பாஜ கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
PM Modi Meeting At Salem பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜ பிரச்சாரகூட்டமானது வரும் 19 ந்தேதி சேலம் மாநகரில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;
PM Modi Meeting At Salem
லோக்சபா தேர்தலானது அடுத்த மாதமோ அல்லது மே மாதமோ நடக்க உள்ளது. தற்போதுள்ள லோக்சபாவின் பதவிக்காலமானது வரும் மே மாதத்தோடு முடிவடைவதால் பொதுத்தேர்தல் தேதியினை விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது.
இதற்காக கடந்த ஒரு ஆண்டு காலமாகவே மாநில கட்சிகள் தேர்தல் குறித்து கூட்டணி, பிரச்சாரம் என ஆயத்தமாகி வருகின்றனர். பாஜவும் மூன்றாவது முறை அரியணையில் ஏற ஆயத்தமாகி வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திரமோடி சூறாவளி சுற்றுப்பயணத்தை துவக்கி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருப்பூர் அருகே பல்லடத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு மதுரை சென்று அங்கு தங்கிவிட்டு மறுநாள் காலை குலசேகர பட்டினம் சென்றார்.
PM Modi Meeting At Salem
இப்போது தனது அடுத்த தமிழக பயணத்தினை திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் வரும் 19 ந்தேதி சேலத்தில் நடக்க உள்ள பாஜகூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.
சேலம் கெஜல் நாய்க்கன் பட்டியில் இதற்கான மேடை அமைக்கப்பட்டு ஏற்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகளை பார்வையிட வந்த மாநிலதுணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ,மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மேற்கு மாவட்ட தலைவர் சுதி்ர் முருகன், சேலம் லோக்சபா பொறுப்பாளர் அண்ணாதுரை, ஆகியோர் கூட்டம் நடக்கும் இடத்தில் நடக்கும் ஏற்பாடுகளை பார்வையிட வருகை தந்தனர்.
மாநில பாஜ துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறும்போது, பிரதமர் மோடி வரும் 15 ந்தேதியன்று சேலத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அது 19 ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகருக்கு வருகை தரும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பொதுமக்கள் இப்போதிருந்தே மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதைக் காணமுடிகிறது. மற்ற கட்சிகளைப் போல் இரண்டு மாதங்களாக நாங்கள் இந்த வேலைகளைப் பார்க்க முயற்சிக்கவில்லை. மூன்று நாட்களுக்குள் கூட்டம் நடத்த தயாராக இருந்த எங்களுக்கு மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
PM Modi Meeting At Salem
பிரதமர் நேரடியாக மைதானத்திலேயே ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவதற்கு ஏதுவாக ஹெலிபேட் அமைக்கும் பணியானது நடந்து வருகிறது. மேலும் அவர் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்து கெஜல் நாய்க்கன்பட்டியிலுள்ள ஹெலிபேடியில் இறங்குகிறார். மதியம் 1.30 மணிக்கு நடக்க உள்ள சேலம், நாமக்கல், கரூர் தொகுதியின் லோக்சபா வாக்காளர்களுக்கான பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்திற்கு 2 லட்சம் பேர் வருகை தரலாம் என எதிர்பார்த்து திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்கான தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
PM Modi Meeting At Salem
சேலம் எஸ்.பி. அருண்கபிலன் கெஜல்நாய்க்கன்பட்டியில் மேடை அமைக்கப்பட உள்ள இடம் பார்வையாளர்கள் அமைவிடம்உ ள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவோடு சேர்ந்து களம் இறங்கிய பாஜ தற்போது தனியே களமிறங்க திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. அதேபோல் அதிமுகவும் அதன் தலைமையில் கூட்டணி அமைத்து தனியே களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இவையிரண்டும் திமுகவுக்கு பெரும் சாதகமாகும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல்ல இது சகஜமப்பா...என கடைசி நேரத்தில் இரு அணிகளும் ஒன்றாகிவிடுமா? என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் உள்ளது. பார்ப்போம் எப்படி சவாரி செய்யப் போறாங்க என்று.... எப்படி சவாரி செய்தாலும் தமிழக மக்களின் கணிப்பு எப்படி உள்ளது.... என்பது தேர்தல் அன்றே தெரிய வரும். பிரதமர் மோடி மூன்றாவது முறையா? அல்லது காங்கிரசுக்கு வாய்ப்பா? மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்... பொறுத்திருந்து பார்ப்போம்..