நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் 17-வது பட்டமளிப்பு விழா
நாமக்கலில் பட்டமளிப்பு விழா: கல்லுாரியில் 1,091 மாணவியர் பட்டம் பெற்றனர்;
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது
நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற இக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா, முத்தமிழ் விழா, கல்லூரி ஆண்டு விழா மற்றும் கல்லூரி பேரவை நிறைவு விழா ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் நேற்று 17-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆங்கிலத் துறைத் தலைவர் திரு. அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் திரு. கோவிந்தராசு மாணவியருக்குப் பட்டச்சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பாக, பொருளியல் துறையைச் சேர்ந்த கார்த்திகா என்ற மாணவி முதுகலை பொருளியல் பிரிவில் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். மேலும், இளங்கலை பொருளியல் பிரிவில் பவித்ரா மூன்றாமிடமும், முதுகலை வரலாற்று பிரிவில் புவனப்பிரியா நான்காவது இடமும், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை முதுநிலை பிரிவில் ரவீனா இரண்டாவது இடமும், சுவாதி மூன்றாவது இடமும் பெற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் 13 துறைகளைச் சேர்ந்த முதுநிலை மற்றும் முதுகலை, இளநிலை மற்றும் இளங்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 1,091 மாணவியர் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.