திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-06-05 05:45 GMT

பைல் படம்.

திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (டிசிஎம்எஸ்) தலைமை அலுவலகத்தில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.7,123 முதல் ரூ.9,723 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.6,423 முதல் ரூ.7,379 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.12,866 முதல் ரூ.18,300 வரை நேரடி ஏலத்தில் வியாபாரிகள் கலந்துகொண்டுகொள்முதல் செய்தனர். மொத்தம் 1,200 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சம் மதிப்பில் ஏலம் போனது.

Similar News