கொல்லிமலையில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-05-28 02:45 GMT

கொல்லிமலை தாலுக்கா, அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வளர்ச்சித்திட்டப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளதா எனவும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் புறநோயாளிகள் பதிவேடு,வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து, வாழவந்திநாடு கிராமத்தில் இயங்கிவரும் கிளை நூலகத்தினை பார்வையிட்டு, நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முறையாக இயங்குகிறதா என்பதனை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அசக்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருவதையும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில், புதிய குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருவதையும், ஆலவடிப்பட்டி கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

பணிகளை ஒப்பந்தகாலத்திற்குள் விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பிடிஓக்களை கலெக்டர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் கொல்லிமலை பிடிஓ.,க்கள் சரவணன், தனபால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News