இன்று முட்டை தினம்: நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவச முட்டை வழங்கல்

உலக முட்டை தினத்தை நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், பொதுக்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கப்பட்டன.

Update: 2021-10-08 09:45 GMT

நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், உலக முட்டை தினத்தை முன்னிட்டு, அம்மா உணவகத்திற்கு வந்தவர்களுக்கு இலவசமாக அவித்த முட்டைகள் வழங்கப்பட்டன.

அக்டோபர் 8ம் தேதியான இன்று, உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், நாமக்கல் நகரில் உள்ள இண்டு அம்மா உணவகங்களில் சாப்பிட்ட அனைவருக்கும், அவித்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், நாமக்கல் பகுதியில் உள்ள சிவபாக்கியம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம், சேந்தமங்கலம் முதியோர் இல்லம், லத்துவாடி நம்பிக்கை இல்லம், மற்றும் கெஜகோம்பை அன்னை எப்சிபா அறக்கட்டளை ஆகிய இல்லங்களில் தங்கி உள்ளோர்களுக்கு, தினம் ஒரு முட்டை வீதம், 1 வாரத்துக்கு தேவையான முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள் பெடரேஷன் உதவி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க தலைவர் பொன்னி, செயலாளர் குமரன், பொருளாளர் பிரபாகரன், மாவட்ட கவர்னர் (தேர்வு) சரவணன், முன்னாள் தலைவர்கள் பன்னீர்செல்வம், செல்வரத்தினம், அண்ணாதுரை, மனோகர், செந்தில், திலக் மற்றும் இன்னர்வீல் மாவட்ட தலைவி தாட்சாயிணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஹிப்ரா இந்தியா நிறுவனத்தின் சார்பில், இளநகர் சிவபாக்கியம் மனநலம் குன்றியோர் பாதுகாப்பு இல்லத்தில் நடைபெற்ற உலக முட்டை தின விழாவில் ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவக்கல்லூரி போராசிரியர் டாக்டர் சந்திரசேகரன், கோழிப்பண்ணை அதிபர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இல்லத்தில் தங்கி உள்ளவர்களுக்கு முட்டையுடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கப்பட்டன.

Tags:    

Similar News