பல்லடத்தில் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்..!

பல்லடத்தில் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-01-25 08:00 GMT

பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நாமக்கல் :

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரில், தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின்  செய்தியாளராக நேசபிரபு என்பவர் பணியாற்றி வருகின்றார். நேற்று இரவு நேசபிரபுவை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி தாக்கி  உள்ளனர். இதில் படுகாயமடைந்த நேசபிரபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் ஊடகத்துறையினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேப்போல தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரிகை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவை தாக்கிய மர்மநபர்களையும், மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையை கண்டித்தும், செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரியும்  நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷமிட்டனர். பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியரை மற்றும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

Similar News