விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு

விவசாயிகள் தமிழக அரசின் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்ட உதவிகளைப் பெறலாம்.

Update: 2024-05-18 01:00 GMT

பைல் படம் 

விவசாயிகள் தமிழக அரசின் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்ட உதவிகளைப் பெறலாம்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் வேளண்மை உழவர் நலத்துறை மூலம் உழவன் மொபைல் போன் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் விவசாயிகள் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, சான்றளிப்புதுறை, நீர்வடி பகுதி திட்டம் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த துறைகள் மூலம் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இடுபொருட்களின் தேவையை மானிய விலையில் பெற்று பயன்பெறவும் இந்த செயலி மூலம் தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் அப்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த செயலியின் மூலம் மண்வளம், மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் இன்சூரன்ஸ், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு, வேளாண் எந்திரங்கள் வாடகை விவரம், சந்தை விலை. வானிலை அறிவுரைகள், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், பயிர்சாகுபடி வழிகாட்டி, இயற்கை விவசாய விளைபொருட்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பொருட்கள் விவரம், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், கருத்துக்கள், பூச்சி, நோய் கண்காணிப்பு பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக அரசின் முன்னோடி திட்டமான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்கைளை சாகுபடி நிலங்களாக மாற்ற குழுவாக பதிவு செய்யவும் உழவன் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உழவன் செயலியை ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களில் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன்லோடு செய்ப்பட்ட செயலியில் தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்து கொண்டு உழவன் செயலியை பயன்படுத்தலாம்.

உழவன் செயலியை நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்களது ஆன்டராய்டு செல்போன்களில் டவுன் லோடு செய்து, வேளாண்மை சார்ந்த தகவல்களை அறிந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News