வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு!

Namakkal news-வெளிநாடுகளில் நர்சிங் வேலை வாய்ப்புக்காக, இலவசமாக அந்நிய மொழிகள் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-05-18 09:45 GMT

Namakkal news- வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள் அந்நிய மொழி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். (மாதிரி படம்)

Namakkal news, Namakkal news today- வெளிநாடுகளில் நர்சிங் வேலை வாய்ப்புக்காக, இலவசமாக அந்நிய மொழிகள் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்ல விருப்பமுள்ளவர்களுக்கு, அயல்நாட்டு மொழிகளான ஜெர்மன், ஜப்பான் போன்ற மொழிகளை கற்றுக்கொள்ள இலவசமாக பயிற்சி அளிப்பது குறித்து, ஓஎம்சிஎல் மற்றும் அஜினோரா வென்ச்சர் போன்ற நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது அயல்நாடுகளில் நர்சுகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், அயல்நாடுகளான ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்குஏதுவாக அயல்நாட்டு மொழிகளை இலவசமாக கற்பதற்கு விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள், ஓஎம்சிமேன்பவர்.டிஎன்.ஜிஓவி.இன் என்ற ஓஎம்சிஎல் நிறுவனத்தின் வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள், நர்சுகள் இப்பயிற்சி குறித்த தங்களது சந்தேகங்களை வாட்ஸ் ஆப் எண்: 63791 79200 மற்றும் ஓஎம்சிஎல் அலுவலக தொலைபேசி எண்கள் 044-22502267, 22505886 மூலம் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News