ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு..!

ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

Update: 2024-05-05 06:00 GMT

ப.வேலூரில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். அருகில் எம்எல்ஏ சேகர், நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி ஆகியோர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 107 டிகிரிக்கும் மேல் வெப்பம் நிலவுவதால் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் பரமத்தி, பாண்டமங்கலம், மாணிக்கநத்தம் மற்றும் ப.வேலூர் ஆகிய இடங்களில் நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல், திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு ப.வேலூர் எம்எல்ஏ சேகர், நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராஹா தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏவுமான தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி மற்றும் பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வெங்கரை டவுன் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, நகர செயலாளர்கள் ரவீந்தர், பொன்னிவேலு, நாராயணன், சுகுமார், செல்வராஜ், மாணிக்க நத்தம் பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News