தமிழக உரிமைகள் திட்ட தற்காலிக பணியிடம் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.!

தமிழக உரிமைகள் திட்ட தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Update: 2024-01-30 14:30 GMT

கோப்பு படம்

நாமக்கல் :

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக பணியிடத்துக்கு, தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுளளதாவது:

நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர், மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணி இடங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும், பிப். 2ம் தேதி, மாலை 4 மணிக்குள், கல்வித்தகுதி, சுயவிபரம், பணி அனுபவம் குறித்த விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு நபர், தற்காலிக உதவியாளர் பணி இடத்திற்கு, ரூ. 17,600 தொகுப்பூதிம் வழங்கப்படும். இப்பணிக்கான கல்வித்தகுதி, முழுநேர இளங்கலை, கணக்கியல், நிதிமேலாண்மை, பொதுநிதி மற்றும் கணக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு, ஒரு நபர் தற்காலிக பணியிடத்திற்கு, ரூ. 11,910 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளார். இப்பணிக்கான கல்வித்தகுதி, முழுநேர இளங்கலை பட்டதாரியாக இருக்க வேண்டும்.

அல்லது கம்ப்யூட்டரில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நாமக்கல் வகுரம்பட்டி கிராமத்தில் அம்மா பூங்கா எதிரில் உள்ள, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட முகமை மேலாளர் அலுவலகத்தில் வரும் பிப். 2ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News