நாமக்கல்லில் சீரடி சாய்பபா மகா சமாதி தினம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

Namakkal news- சீரடி சாய்பாபாவின் 106-வது மகா சமாதி தினத்தையொட்டி, நாமக்கல் இந்திரா நகர் சாய் தத்தா பிருந்தாவனத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2024-10-12 11:45 GMT

Namakkal news-நாமக்கல்லில் நடைபெற்ற சீரடி சாய்பாபா மகா சமாதி தின சிறப்பு பூஜையில், திரளான பெண்கள் அகல் விளக்கால் அலங்காரம் செய்து வழிபட்டனர்.

Namakkal news, Namakkal news today- சீரடி சாய்பாபாவின் 106-வது மகா சமாதி தினத்தையொட்டி, நாமக்கல் இந்திரா நகர் சாய் தத்தா பிருந்தாவனத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சீரடியில் உள்ள சாய் பாபா ஆலயத்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.சாய்பாபா 1918-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். இதையடுத்து ஆண்டு தோறும் விஜயதசமி தினத்தன்று சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தை அவரது பக்தர்கள் நடத்தி வருகிறார்கள். சாய்பாபாவின் 106-வது மகா சமாதி தினமான இன்று, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் கோயிலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சாய் சரிதம், சாய் பாராயணம், சாய்பாபா காயத்ரி அஷ்டோத்ர ஹோமங்கள், மதியம் சாய் சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாய்பாபாவிற்கு ஆரத்தி நிகழ்வு நடந்தது. சாய்பாபாவுக்கு நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களைப் பாடினர். பெண்கள் அகல் விளக்குகள் மூலம் சாய்பாபாவின் உருவத்தையும். அவரது நாமத்தையும் உருவாக்கி வழிபட்டனர். சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாய் ஹர்ஷா பவுண்டேசன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News