அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு: ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

தமிழகத்தில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையில் திருத்தம் செய்து அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்துள்ளதற்கு, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-10-12 08:15 GMT

நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு.

அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு: ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

நாமக்கல்,

தமிழகத்தில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையில் திருத்தம் செய்து அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்துள்ளதற்கு, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு நேரடி நியமனம் பெற்ற முதுநிலை ஆசிரியர்கள் சங்க தலைவர் நாமக்கல் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் கண்ணப்பன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

அரசுப் பள்ளிகளுக்காக, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 2024 -25 கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டி வெளியிட்டு கருத்து ஆலோசனை பெறப்பட்டது. இதன் அடிப்படையில், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று மீண்டும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளித்தும், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்கான வேலை நாட்களை 210 க்கும் குறையாமல் இருக்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்புடைய விதிகள் அடிப்படையிலும் உரிய திருத்தங்களை செய்து பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையை வெளியிட்ட, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளருக்கும் அந்த கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News