வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ கைது

நாமக்கல் அருகே வழக்கில் இருந்து விடுவிடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-04 07:15 GMT

சண்முகம்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக சண்முகம் (56) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாணத்தி அருகே உள்ள செலம்பாகவுண்டம் பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது அடிதடி வழக்கு இருந்துள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று எஸ்.ஐ சண்முகம், செல்வகுமாரிடம் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதனடிப்படையில், இன்று காலை, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் மாணத்தி கிராமத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு எஸ்.ஐ சண்முகத்திடம், செல்வகுமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்போது போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட எஸ்.ஐ சண்முகத்தின் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News