நாமக்கல் லட்சுமி ஹயக்கிரீவருக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை

நாமக்கல் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-05-16 04:45 GMT

நாமக்கல் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு புதிய தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, ராமாபுரம் புதூரில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருக்கோயில் உள்ளது. குதிரை முகம் கொண்ட லட்சுமி ஹயக்கிரீவரை வேண்டினால், கல்வியும் செல்வமும் வளரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம், மாணவ மாணவிகள் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, சுவாமிக்கு போனா மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இக்கோயிலில் பக்தர்களின் விருப்பத்தின் பேரில், புதியதாக தங்கக்கவசம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி லட்சுமி ஹயக்கிரீவருக்கு புதிய தங்க்கவசம்சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் நிர்வாகி ஜெயராமபட்டர் தலைமையில் பட்டாச்சாரியார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News