நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ புத்தகங்கள் அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 478 அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான 2ம் பருவ புத்தகங்கள் அனுப்பி வைப்பு.

Update: 2021-10-23 23:30 GMT

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

நாமக்கல் கல்வி மாவட்டத்தில், உள்ள 478 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக, ஒன்று முதல் 7ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவ புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக பாடநூல் கழகம் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களை அச்சடித்து விநியோகம் செய்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் படித்து வந்தனர். கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

வரும் நவ. 1-ஆம் தேதி ஒன்று முதல் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் பள்ளி திறந்ததும் வழங்கப்பட உள்ளன. நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலகத்தில் உள்ள கிடங்கில் இருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்பணிகளை மாவட்டக் கல்வி அலுவலர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிக் கல்வி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News