நாமக்கல்லில் பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியரசு தின விழா

நாமக்கல்லில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-26 12:45 GMT

குடியரசு தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மாலை அணிவித்தார்.

நாமக்கல்லில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

* நாமக்கல் சட்டசபை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் கைலாசம், மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ராணி, முன்னாள் நகராட்சித் தலைவர் கரிகாலன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்ட திரளானர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

* நாமக்கல் பொன்விழா நகரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வகுரம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா ரகுமான் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக வக்கீல் ரமேஷ் பொறுப்பேற்று கொண்டார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

* நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச் சங்கம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சதீஸ் பங்கேற்று தேசிய கொடியேற்றினார். அனைவரும் வீர வணக்கம் செய்து மரியாதை செலுத்தினர். விழாவில் கோவிந்தராஜூ, அன்பழகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சேக்நவீத்,ஜெயந்தி, செல்வராஜ், கமலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி வைத்தார். விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி சுந்தரையா, கூடுதல் சார்பு நீதிபதி முருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் கபாலீஸ்வரன் மற்றும் நீதிபதிகள் வக்கீல்கள், கோர்ட் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News