நாமக்கல்லில் 27ம் தேதி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

Namakkal news- நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2024-05-25 11:30 GMT

Namakkal news- நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி.,

Namakkal news, Namakkal news today- நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 27ம் தேதி  நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 27ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வருகின்ற ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் பார்லி தேர்தல் ஓட்டு எண்ணும் ஏஜெண்டுகளின் பணி குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News