டிரினிடி கல்லூரி சேர்மன் செங்கோடன் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

Namakkal news-நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி சேர்மன் செங்கோடனின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-25 11:30 GMT

Namakkal news- நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், மறைந்த கல்லூரி தலைவர் செங்கோடனின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி சேர்மன் செங்கோடனின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல், டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தலைவராக பணியாற்றி வந்த, பி.எஸ்.கே.செங்கோடன் கடந்த ஆண்டு 24.5.2023 அன்று காலமாணார். இதையொட்டி அவரது முதலாம் ஆண்டு நிணைவேந்தல் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் தென்பாண்டியன் நல்லுசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயல் இயக்குனர் அருணா செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் லட்சுமி நாராயணன், உயர்கல்வி இயக்குனர் அரசு பரமேஸ்ரவன், நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பேராசிரியர்கள் சசிகலா, லதா, உஷாராணி, கவிதா, ரூபா, அர்ச்சனா, செல்வி, அனிதா, ரேவதி, தீபிகா, அபிராமி, துணீனீஷா, அலுவலகப் பணியாளர்கள் சண்முகம், மணிவண்ணன், ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

* டிரினிடி கல்லூரி முன்னாள் சேர்மன் சேர்மன் செங்ககோடனின் நினைவேந்தல் நிக்ச்சி, நாமக்கல் ஆன்மிக வேள்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. டிரினிடி மகளிர் கல்லூரி தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி தலைமை வகித்தார்.

நாமக்கல் தமிழ்ச்சங்கம் தலைவர் டாக்டர் குழந்தைவேல் வரவேற்றார். டிரினிடி மகளிர் கல்லூரி செயலாளர் செல்வராஜ், கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் குருவாயூரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை திவ்யா கலைஅறிவியல் கல்லூரி முதல்வர் ராமு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருப்புகழ் இன்பம் என்ற தலைப்பில் பேசினார்.

டிரினிடி கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் சந்திரசேகரன், தயாளன், கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் செழியன், சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், டாக்டர் மல்லிகா, பசுமை இயக்கம் சத்தியமூர்த்தி, தில்லை சிவகுமார், கேகேபி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் நல்லதம்பி, பிஎஸ்கே குரூப் நிறுவனங்களின் இயக்குனர்கள் சேகர், செல்வராஜ், ரவி, மாரப்பன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் நிகழ்சியை தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News