தமிழ் செம்மல் விருதுபெற்ற கமலமணிக்கு ராஜேஷ்குமார், எம்.பி., பாராட்டு

தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருதுபெற்ற கமலமணிக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2025-04-05 11:50 GMT

தமிழக அரசின் சார்பில், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கமலமணிக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., பாராட்டு தெரிவித்தார். அருகில் கலெக்டர் உமா, மாதேஸ்வரன், எம்.பி., ஆகியோர்.

நாமக்கல்,

தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருதுபெற்ற கமலமணிக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்களுக்கு, அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் தாலுகா, பொத்தனூரைச் சேர்ந்த கமலமணி என்ற பெண் மலையிடைப் பிறவாமணி, காற்றின் மொழி, கமலா சிவம் கவிதைகள், தையலை உயர்வு செய், ஆடிப்பெருக்கு, சிவக்க மறந்த அந்திவானம் மற்றும் எப்போது வருவாய் உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார்கள். அவர் ஆற்றிவரும் தமிழ்த்தொண்டினை பெருமைப்படுத்தும் வகையில், அவருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான, தமிழ்ச்செம்மல் விருது மற்றும் ரூ.25,000 காசோலையினை வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற கமலமணிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் உமா, நாமக்கல் லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன், மேயர் கலாநதி, துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News