வாழப்பாடியில் இன்று ஜல்லிக்கட்டு விழா
சித்திரை திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வாழப்பாடி சிங்கிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெறுகிறது;
வாழப்பாடியில் இன்று ஜல்லிக்கட்டு விழா – கலெக்டர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு
வாழப்பாடி: சித்திரை திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வாழப்பாடி சிங்கிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறப்பாக தொடங்கி வைக்க உள்ளார். விழா சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை பார்த்தறிய, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று மதியம் நேரில் வந்து ஜல்லிக்கட்டு மைதானம், மேடை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், விழா நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு திட்டங்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விஷயங்களை குறித்து கலெக்டர் அதிகாரிகளிடம் விவரமாக கேட்டறிந்தார். கலெக்டருடன் வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி மற்றும் பல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.