ஆஞ்சநேயர் கோவிலில் நாளை ராம நவமி சிறப்புவிழா

சேலத்தில், புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி உற்சவம் நாளை (ஏப்ரல் 4) பக்திபூர்வமாக கொண்டாடப்பட உள்ளது;

Update: 2025-04-05 10:10 GMT

சேலம் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை ராம நவமி சிறப்புவிழா

சேலம்: சேலம் முதல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி உற்சவம் நாளை (ஏப்ரல் 4) பக்திபூர்வமாக கொண்டாடப்பட உள்ளது.

விழா தினத்தன்று அதிகாலை 4:00 மணி அளவில், பஞ்சசுத்த ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையடுத்து, ராமர் வடிவில் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம், நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாலையில் சிறப்பு தீபாராதனையுடன் தொடங்கி, முரளிதர சுவாமிகளின் சிஷ்ய குழுவினர் ‘ராம நாம மகிமை’ என்ற தலைப்பில் உபன்யாசம் மற்றும் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட உள்ளனர்.

விழாவில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்று சீரான ஆன்மிக அனுபவத்தை பெற கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News