அரசுத் துறை ஊழியர்களுக்கான தேர்வு
அரசுத் துறை ஊழியர்களுக்கான தேர்வு மே 19 முதல் ஏப்ரல் 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது;
அரசுத் துறை ஊழியர்களுக்கான தேர்வு மே 19 முதல் ஏப்ரல் 24 வரை ஆன்லைன் விண்ணப்பம்
சேலம்: தமிழக அரசின் வருவாய் மற்றும் பள்ளிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துறை தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகள், பதவி உயர்வுக்கும், சம்பள உயர்விற்கும் முக்கியமாகப் பயன்படுகின்றன.
2024-ம் ஆண்டு துறைத் தேர்வுகள் மே மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. அதன்படி, மே 19 முதல் 23 வரை கணினி வழித் தேர்வுகள் (CBT) நடைபெறும். மேலும், மே 26 முதல் 29 வரை விரிவான பதில் எழுத்து (Descriptive) முறை தேர்வுகள் நடைபெறும்.
இந்தத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 2 முதல் , ஏப்ரல் 24, இரவு 11:59 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தேர்விற்கும் ரூ.200 தேர்வு கட்டணம் மற்றும் ரூ.30 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள அரசு ஊழியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.