காப்பிரைட் பெறாமல் சினிமா பாடல் ஒளிபரப்பு தனியார் டிவி சேனல் மேலாளர் கைது
காப்பிரைட் பெறாமல் சினிமா பாடலை ஒளிபரப்பிய நாமக்கல் தனியார் டிவி சேனல் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.;
பைல் படம்
நாமக்கல்,
காப்பிரைட் பெறாமல் சினிமா பாடலை ஒளிபரப்பிய நாமக்கல் தனியார் டிவி சேனல் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல், ராமாபுரம்புதூர் அன்பு நகர் பேஸ் 3 பகுதியில் வசிப்பவர் கலையரசு, இவர் கிங் டிவி 24 இன்டு 7 என் இண்டர்நெட் டிவி சேனலை நடத்தி வருகிறார். இந்த டிவியில், கடந்த 2024ம் ஆண்டு, அக்டோபர் 4ம் தேதி மாலை, அழகிய தமிழ் மகன் என்ற சினிமாப் படத்தில் இருந்து, வளையப்பட்டி தவிலே என்ற பாடலை எவ்வித காப்பிரைட்டும் பெறாமல் ஒளிபரப்பி உள்ளார். இது குறித்து, சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரை சேர்ந்த ஜே.வி, கே.டி.எஸ்., என்டர்பிரைசஸ் நிறுவன மேலாளர் குமார் (50), என்பவர் சேலம் அறிவுசார் சொத்துரிமை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு, நாமக்கல் கிங் டிவி அலுவலகத்திற்கு வந்த சேலம் அறிவுசார் சொத்துரிமை போலீசார், அங்கிருந்த அதன் மேலாளர் உரிமையாளர் எழிலரசு என்பவரை, காப்பிரைட் பெறாமல் டிவி சேனலில் சினிமாப்பாடலை ஒளிபரப்பிய குற்றத்திற்காக கைது செய்தனர்.