சேலத்தில் ரம்ஜான் பண்டிகை கைதிகளுக்கு பிரியாணி
சேலம் மத்திய சிறையில் ரம்ஜான் பரிசு, கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கல்;
கைதிகளுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது
சேலம் மத்திய சிறையில் தங்கியுள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1,315 பேருக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று தியாகி திப்பு சுல்தான் பேரவை சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த விருந்துக்காக சேலம் மத்திய சிறையில் கைதிகள் பராமரிக்கும் கோழிப்பண்ணையில் இருந்து 270 கிலோ சிக்கன் எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வெளியில் இருந்து தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கி வரப்பட்டு, சிறையிலேயே சிக்கன் பிரியாணி தயாரிக்கப்பட்டு அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த முயற்சி சிறைக்கைதிகளுக்கு பண்டிகை மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையில் அமைந்தது.