நாமக்கல் எம்பி பரிந்துரையால் பெரியமணலி கிளை அஞ்சலகம் தரம் உயர்வு

நாமக்கல் அருகே பெரியமணலி கிளை அஞ்சலகம், துணை அஞ்சலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2021-09-28 11:30 GMT

சித்தரிக்கப்பட்ட படம்.

இதுகுறித்து,  நாமக்கல் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில், பெரியமணலி கிளை அஞ்சலகம் செயல்பட்டு வந்தது. நாமக்கல் எம்.பி சின்ராஜ் பரிந்துரையின்படி பெரியமணலி கிளை அஞ்சலகம், 58 வது கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட துணை அஞ்சலமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த துணை அஞ்சலகத்தில் கீழ்,  கோக்கலை மற்றும் சின்னமணலி கிளை அஞ்சலகங்கள் செயல்படும்.

எனவே ஜேடர்பாளையம், பெரியமணலி, குமரவேலிபாளையம், குஞ்சப்பாளையம், கோட்டப்பாளையம், குருக்கப்புரம், சின்னமணலி, கொளத்துப்பாளையம், தேவூராம்பட்டி, பாளையம், கோக்கலை, நெய்க்காரம்பாளையம், இளையம்பாளையம், கருப்பகவுண்டனம்பாளையம், கரியாம்பாளையம், மேட்டுப்பாளையம், கந்தசாமி புதூர், துண்டு காட்டூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 637410 என்ற பின் கோட்டிற்கு பதிலாக 637216 என்ற பின் கோடை இனி உபயோகப்படுவேண்டும்.

பெரியமணலி கிளை அஞ்சலகம் ஆக இருந்தபோது,  ஒரு சில குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே பொதுமக்களால் பெற முடிந்தது. தற்போது துணை அஞ்சலகமாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம், அனைத்து விதமான அஞ்சல் சேவைகளையும் பெரியமணலி துணை அஞ்சலகத்தில் பொதுமக்கள் பெறலாம். எனவே, அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளையும் அப்பகுதி பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News