நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு துவங்கியது: 798 பேர் ஆப்செண்ட்

நாமக்கல் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மொத்தம் 798 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

Update: 2022-05-10 06:45 GMT

தமிழகம் முழுவதும் ஏற்கனவே பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 82 மையங்களில் தேர்வு எழுதிவருகின்றனர்.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களில் மொத்தம் 19,970 மாணவ மாணவிகள் தமிழ், இந்தி, பிரஞ்ச் ஆகிய மொழிப்பாடங்களுக்கு தேர்வு எழுத விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். இவர்களில் 19,167 பேர் தேர்வு எழுத மையங்களுக்கு வந்திருந்தனர். மொத்தம் 798 பேர் தேர்வு எழுத வரவில்லை. 5 மாணவர்கள் விதிவிலக்கு பெற்றுள்ளனர். சுமார் 1,500 அலுவலர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News