கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த பெண்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Namakkal Collector Office - கோரிக்கை மனுக்களை மாலையா அணிந்துகொண்டு, கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-28 02:15 GMT

நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த பெண் லட்சுமி.

Namakkal Collector Office -தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கக்கோரி, நாமக்கல் மேட்டுத்தெருவை சேர்ந்த லட்சுமி என்ற பெண் கோரிக்கை மனுக்களை மாலையாக கழுத்தில் அணிந்துகொண்டு, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:

நான் நாமக்கல் நகரில், வாடகை வீட்டில் எனது மகனுடன் வசித்து வருகிறேன். கடந்த 2016ம் ஆண்டு நாமக்கல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம், நிலவங்கி திட்டப்பகுதி 4ல் வீடு கேட்டு அதற்குரிய தொகையை வங்கி டிராப்ட் எடுத்து செலுத்தினேன். ஆனால் எனக்கு வீடு ஒதுக்கீடு செய்யாமல், எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு செய்தும் பயனில்லை. இச்சூழலில் கடந்த 2021ம் ஆண்டு நான் வசிக்கும் இடத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில், குடிசை மாற்று வாரியம் மூலம் நிலவங்கி திட்டப்பகுதி 3ல் வீடு ஒதுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், கடந்த 2016ம் ஆண்டு விண்ணப்பம் செய்த பகுதி 4ல் காலியாக உள்ள வீட்டை எனக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News