ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் 99.93 மதிப்பெண்கள் பெற்று சாதனை : 35 பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி

நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர், ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் 99.93 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இப்பள்ளி மாணவர்கள் 35 பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.;

Update: 2025-04-19 09:30 GMT

ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் 99.33 மதிப்பெண்கள் பெற்று தேசிய சாதனை படைத்த நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் மைலானந்தத்திற்கு பள்ளி முதல்வர்கள் ராஜசுந்தரவேல், விக்டர் பிரேம்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் நேஷனல் பப்ளிக் பள்ளி

மாணவர் 99.93 மதிப்பெண்கள் பெற்று சாதனை :

35 பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி 

நாமக்கல்,

நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர், ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் 99.93 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இப்பள்ளி மாணவர்கள் 35 பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட இந்திய தொழில் நுட்ப கல்விக்கான ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள், தேசிய தேர்வுகள் முகமை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் அமர்வு தேர்வில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அதிக மெதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் 35 பேர் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பள்ளியின் பிளஸ் 2 வகுப்பு மாணவரான மைலானந்தன் ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வில் 99.93 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் சாதனை படைத்துள்ளர். அவர் இந்திய அளவில் 208-வது ரேங்க் பெற்றுள்ளார். மேலும் இத்தேர்வில் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ள நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள்: மைலானந்தன் 99.93, நிரஞ்சன் 98.92, ஆரவ் 98.36, பவே சைனி 97.19, நிகில் விக்னேஷ் 96.80, பிரியன் 96.94, பிரியதர்ஷன் 96.66, சக்தி நந்தன் 96, அபிஷேக் 95.19. இவர்கள் உள்ளிட்ட இப்பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 35 மாணவர்கள் வரும் மே 18ம் தேதி நடைபெற உள்ள ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுத உள்ளனர். ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேசிய சாதனை படைத்த மாணவ மாணவிகளை நேஷனல் பப்ளிக் பள்ளி சேர்மன் சரவணன், பள்ளி முதல்வர் ராஜசுந்தரவேல், மேல்நிலை வகுப்பு முதல்வர் விக்டர் பிரேம் குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Similar News