இருசக்கர வாகன மோசடியில் சிக்கிய இளைஞர்
இருசக்கர வாகன திருடனிடமிருந்து மொத்தம் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை சேர்ந்த முருகனின் மகன் சேட்டு சிவா (வயது 27), தற்போது சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி அருகே வசித்து வருகிறார். இவர், கடந்த பல ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புகிறேன் என்ற பெயரில் உரிமையாளர்களிடம் பரிசோதனை ஓட்டம் கேட்டு பின் திருடிச் செல்வது வழக்கமாக இருந்தது. சமீபத்தில் காங்கேயத்தில் ஒருவரிடம் வாகனத்தை ஓட்டிப் பார்க்க வேண்டும் என சொல்லி எடுத்துச் சென்ற சிவா, அதை திருடிச் சென்று விட்டார். இதையடுத்து வாகன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சிக்கிய சிவா கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து மொத்தம் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.