மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கலில் மொத்தம் 20 லட்சம் மரக்கன்றுகள், பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் நடப்பட்டுள்ளது;

Update: 2025-04-19 10:00 GMT
மரக்கன்றுகள் நடும் விழா
  • whatsapp icon

மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல் மாவட்டத்தில் ‘பசுமை தமிழகம் இயக்கம்’ செயல்பாட்டின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 20 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளதாக கலெக்டர் உமா தெரிவித்தார். புதுச்சத்திரம் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழா மற்றும் சட்டப்பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார். 2023ஆம் ஆண்டு 10.21 லட்சம் மற்றும் 2024ஆம் ஆண்டு 9.75 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்டவையின் மூலம் நடப்பட்டுள்ளதாகவும், வனம் மற்றும் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மரங்கள் மழை பொழிவுக்கு இன்றியமையாதவையாக இருப்பதால், அனைவரும் குறைந்தது ஒரு மரம் நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் கலெக்டர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் எஸ்பி விஜயராகவன், நீதிபதிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News